தெற்காசியாவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அந்தஸ்து
2023ஆம் ஆண்டில் தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த தாய்மார்கள் இறப்பு விகிதத்தை கொண்ட நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள '2000 முதல் 2023 வரையிலான தாய்மார்கள் இறப்புப் போக்குகள்' அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச இறப்பு விகிதம்
குறித்த அறிக்கையின்படி, இலங்கையில் 100,000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 18 தாய்மார்கள் என்ற குறைந்தபட்ச இறப்பு விகிதமே பதிவாகியுள்ளது.

இதே காலப்பகுதியில் தெற்காசிய பிராந்திய சராசரி 117 ஆகவும், உலகளாவிய சராசரி 197 ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
[OOVYFNX