நாட்டிலுள்ள நான்கு ஆறுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்!
நாட்டிலுள்ள நான்கு ஆறுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜின் கங்கை , அத்தனகலு ஓயா, களு கங்கையின் குடா கங்கை துணைப் படுகை, நில்வலா கங்கை ஆகிய ஆறுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கையே தற்போது நீக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்
அத்தோடு, இலங்கை முழுவதும் உள்ள மழைப்பொழிவு நிலவரங்களையும், ஆற்று நீர்மட்ட மாற்றங்களையும் தங்களது நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படுமாயின், பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.