மகிந்த ராஜபக்சவுக்கு சோறு சமைத்துக் கொடுத்து தனது வாழ்வை தியாகம் செய்த ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தனது வாழ்நாளில் தனது கணவருக்கு உணவு சமைத்துக் கொடுப்பதையே பெரும் சேவையாக செய்தார் என்று பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் சஞ்சீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்சவை அறிந்திருக்கின்றீர்களா. அவர் எப்போதும் அரசியல் பேசியதேயில்லை.
மகிந்தவுக்காக வாழ்ந்த ஷிரந்தி
எமது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க போன்ற தலைவர்கள் அரசியல் மேடைகளில் உரையாற்றியதைப் போல, ஷிரந்தி ராஜபக்ச உரையாற்றுவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா.
அவர் தனது வாழ்நாள் முழுவதும் மகிந்த ராஜபக்சவுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்துக் கொடுப்பதை மாத்திரமே செய்தார். மகிந்த ராஜபக்சவுக்கு என்னத் தேவை என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப உணவுகளை சமைத்துக் கொடுப்பார்.

அதைத் தவிர்த்து அரசியலுக்கு வரவோ, அரசியல் பற்றியோ அவர் எப்போதுமே பேசியதில்லை.
மகிந்த ராஜபக்சவுடன் ஒரு முறை அமர்ந்து உணவு உண்ண எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் வெள்ளைச் சோறு உண்ணவில்லை. சிவப்பு அரிசிச் சோறுதான் மகிந்த ராஜபக்ச சாப்பிடுவார்.
அவரோடு உணவு உண்ணுவதற்கு அமர்ந்தபோது, அங்கு சிவப்பரிசிச் சோறும், உருளைக் கிழங்கு கறி, தேங்காய்ச் சம்பல் உள்ளிட்டவை தான் இருந்தன.
அவரோடு உணவருந்தியப் பின்னர், யோஷித ராஜபக்ச வந்து என்னை அழைத்துச் சென்றார். வழக்கொன்றைப் பற்றி பேசுவதற்காக அவர்களோடு அமர்ந்தேன்.