2029இல் நாமல் தான் ஜனாதிபதி! மக்கள் மீது மொட்டுக் கட்சிக்கு இருக்கும் அபார நம்பிக்கை
எதிர்வரும் 2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி சஞ்சீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமல் விடுதலையாவார்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை விடுவிப்பதற்காக சட்டத்துறை சார்ந்தவர்கள் ஒன்னறிணைந்து செயற்பட்டு வருகின்றார்கள்.

2029இல் நாமல் ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.
நாமல் ராஜபக்சவை விடுவிப்பதற்காக எங்களது சட்டக் குழு களமிறங்கும். இது உறுதி. 2029இல் நாம் ராஜபக்சவை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.