சிவாஜிலிங்கம் கூறிய இறுதி வார்த்தைகள்! மனைவியையும் விட்டு வைக்காத CID
இலங்கை அரசியலில் நீண்டகாலம் தனித்துவமான அரசியல் பயணத்தை முன்னெடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு பல்வேறு கேள்விகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கான நினைவு தினத்தை சரியான முறையில் அனுஷ்டிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு மாமனிதர் இவராவர்.
இந்த நிலையிலே அவரது பேரிழப்பிற்கு பல அரசியல் தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதுமட்டுமன்றி சிவாஜிலிங்கம் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்திருந்தனர்.
மரண படுக்கையில், சிவாஜிலிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது, அவரது குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் வகையிலும், அவர்களுக்கு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் முகமாக, சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்தமை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
அவரது மறைவு தமிழ் அரசியல் சமூகத்திற்கும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.