புதிய பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிதாக அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கான அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டக் கொடுப்பனவுகள் 2026 நவம்பர் 27 அன்று ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (நவம்பர் 15, 2026) நிறைவடைந்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு...
நலன்புரி நன்மைகள் சபையின் (Welfare Benefits Board) தலைவர் நிமல் கொட்டாவெலகெதர நேற்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, திருத்தப்பட்ட பட்டியலின் கீழ் தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செயல்முறைக்கு ஒரு மாத காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலாளர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மறுஆய்வு செய்ய தொடங்குவார்கள் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மத்திய கிழக்கு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட விசேட கொடுப்பனவும், வறிய மற்றும் மிகவும் வறிய பிரிவினருக்கான வழமையான கொடுப்பனவுகளுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விவரங்களுக்கு நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 1924 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.