பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்திய சிவாஜிலிங்கத்தின் இறுதிப் பயணம்
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் தனது 69வது வயதில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு அவரது இல்லத்தில் காலமானார்.
இறுதி கிரியைகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வல்வெட்டித்துறை சந்தியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது பலநூற்றுக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகர் பகுதி வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களை மூடி கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு இருந்தனர்.
இந்நியைில் அவரின் மரணத்திற்கு வடக்கு கிழக்கு உட்பட ப பகுதிகளில் இருந்தும் பலநூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சிவாஜிலிங்கத்தின் இறுதி பயணம் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....