15 இலட்சம் மக்கள் முன்னிலையில் பாப்பரசருக்கு நேர்ந்த சம்பவம்! வலியிலும் அவர் செய்த செயல்
பெருவில் நடைபெற்ற இறுதி திருப்பலிக்கு முன்னதாக, பாப்பரசர் லியோ XIV பயணித்த Popemobile வாகனத்தின் மீது வீசப்பட்ட ஜெபமாலை அவரது கண்ணில் பட்டது.
திங்கட்கிழமை லிமா விமானப்படைத் தளத்தில் சுமார் 15 இலட்சம் மக்கள் கலந்துகொண்ட நிகழ்வின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
புனித பாப்பரசர் லியோ
கண்ணில் அடிபட்டதால் பாப்பரசர் சிறிது நேரம் வலியால் முகம் சுளித்த போதிலும், தனது பயணத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.
பின்னர் விமானப் பயணத்தின்போது இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், ஜெபமாலையை வீசிய நபரை மன்னிப்பதாகக் கூறினார்.

“அந்த நபர் ஆழ்ந்த நம்பிக்கையுடன் எனக்கு ஜெபமாலையை வழங்கவே விரும்பினார். சில விடயங்கள் இதயத்தில் பதியும் சிலவேளை கண்ணில்கூட பதிந்துவிடும்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
பெரு மக்களிடையே ஆழமான மத நம்பிக்கையும் பாப்பரசர் மீதான அன்பும் இருப்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.