கனடா செல்ல காத்திருப்போருக்கு புதிய வாய்ப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தொழிலாளர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யவும் திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை ஈர்ப்பதற்கான புதிய முன்னுரிமைத் தொழில்துறைகளை கனடா அறிவித்துள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC), Express Entry குடியேற்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கனடாவின் பொருளாதாரம்
இதன்படி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள், திறன்மிகு தொழில்கள், கல்வித்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM), போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் பணியாற்றும் நிபுணர்கள் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், கனடாவில் பணி அனுபவம் கொண்ட மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களும் Express Entry திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெறும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் தற்போதைய தொழிலாளர் வளத்தைப் பூர்த்தி செய்வதுடன், முக்கிய துறைகளில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களை சமாளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என IRCC தெரிவித்துள்ளது.
நிர்வகிக்கும் குடியேற்ற முறைமை
Express Entry என்பது திறமையான வெளிநாட்டுப் பணியாளர்கள் கனடாவின் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை நிர்வகிக்கும் குடியேற்ற முறைமையாகும்.
குறிப்பிட்ட தகுதிகள், பணி அனுபவம் மற்றும் மொழித் திறன் கொண்டவர்களுக்கு அழைப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த அறிவிப்பு, கனடாவில் குடியேற விரும்பும் இலங்கைத் திறமையான தொழில்முறைப் பணியாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும், விண்ணப்பதாரர்கள் உரிய தகுதி மற்றும் குடியேற்ற நிபந்தனைகளைப்
பூர்த்தி செய்ய வேண்டும்.மேலதிக தகவல்களை கனடாவின் உத்தியோகபூர்வ குடிவரவு இணையத்தளமான www.canada.ca