இலங்கையில் மாயாஜாலத்திற்காக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சகோதரன்
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் வீட்டு உரிமையாளரின் இளைய சகோதரரை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டின் தோட்டத்தில் புதையல் இருப்பதாக நம்பப்பட்டு, அதனை எடுப்பதற்காக அந்த இந்த கொலை செய்யப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளரின் இளைய சகோதரரான 41 வயதுடைய நிமல் கருணாரத்ன என்ற திருமணமாகாத நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதையலுக்காக கொலை
குறித்த வீட்டில் உள்ளவர்கள், கொலை செய்யப்பட்ட சகோதரரின் இறுதிச் சடங்கிற்கு சென்ற பின்னர் அந்தப் புதையலைத் தோண்டி எடுக்க திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதத்தை பொத்துவில் குளத்தில் வீசியதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பொலிஸ் சுழியோடிகளைப் பயன்படுத்தி கடந்த 14, 15 ஆகிய இரு தினங்களும் ஆழ்கடல் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
மேலதிக விசாரணை
சந்தேகநபர் பொலிஸாரை திசை திருப்பியுள்ளதை உணர்ந்த அதிகாரிகள், மீண்டும் மேற்கொண்ட விசாரணைகளின் பயனாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் வேறொரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நேற்று முன்தினம் மஹவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் அனுருத்திகா செனவிரத்ன உத்தரவிட்டார்.
சந்தேகநபர் தனியாக இந்த குற்றத்தை செய்தாரா அல்லது இதற்கு மேலும் சிலர் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்