சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு : ஸ்தம்பிக்கவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள்
சட்டத்தரணிகள் இன்றையதினம்(16.02.2026) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகுரேகொடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய அவசரக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சட்டத் துறையில் பணியாற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்த தீவிர அச்சம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகுரேகொடா பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்டத்துறையினரிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்ட நடவடிக்கை, உயிரிழந்த சட்டத்தரணிக்கு அஞ்சலி செலுத்துவதோடு, சட்டத் துறையினரின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கத்திலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri