IPL அணிகளின் அதிரடி முடிவு! 6 இலங்கை வீரர்களுக்கு இடமில்லை
2027ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு முன்னதாக, மதீஷ பதிரன மற்றும் வனிந்து ஹசரங்க உள்ளிட்ட ஆறு இலங்கை வீரர்களை அவர்களது அணிகள் விடுவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள வீரர்கள் விடுவிப்புப் பட்டியலின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து மதீஷ பதிரன விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வீரர்கள்
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியிலிருந்து வனிந்து ஹசரங்கவும், டெல்லி கெபிடல்ஸ் அணியிலிருந்து பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து கமிந்து மெண்டிஸ் மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஏஷான் மலிங்க மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நுவான் துஷார ஆகியோர் குறித்த பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் தத்தமது அணிகளில் தக்கவைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்கள், உரிய தகுதி மற்றும் பதிவு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் 2027ஆம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.