எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி! ஹர்பஜன் சிங்கின் எச்சரிக்கை
கொழும்பில் இன்று(15.02.2026) நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் விக்கெட் காப்பாளர் நயன் மோங்கியா ஆகியோர் இந்திய அணிக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் குறித்து ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணியினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
"அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர், அவரை இந்திய வீரர்கள் அவதானமாக எதிர்கொள்ள வேண்டும். எவ்வித அழுத்தமும் இன்றி விளையாடினால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உஸ்மான் தாரிக் தனது 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். எனினும், அவரது பந்துவீச்சு முறை (Sidearm action) மற்றும் பந்தை வீசுவதற்கு முன் அவர் எடுக்கும் ஒரு சிறிய இடைநிறுத்தம் (Pause) ஆகியவை கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோங்கியாவின் பயம்
நயன் மோங்கியா கருத்துத் தெரிவிக்கையில், "பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து இந்தியாவிடம் தோற்று வருவதால், அவர்கள் மீது அதிக அழுத்தம் இருக்கும். இந்திய இளைஞர்கள் எதற்கும் அஞ்சாமல் விளையாடுகிறார்கள்" என்றார்.

மேலும் பெரிய போட்டிகளில் நெருக்கடியை சிறப்பாக கையாளும் ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார் என மோங்கியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 315 ஓட்டங்களையும் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறந்த சாதனையை வைத்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri