இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி களத்தில் ஜனாதிபதி அநுர
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண கொழும்பிலுள்ள ஆர்.பிரேமதாஸ மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.
எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர
டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்று களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை ஆரம்பமாகிய நிலையில், இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் அணி மறுப்பு தெரிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டும் பிற நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டும் பாகிஸ்தானிய அரசாங்கம் இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் ஆண்கள் அணியை அனுமதித்தது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் தனது ஆண்கள் அணியை அனுமதித்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்பொது போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அநுரகுமார திசாநாயக்க வருகை தந்துள்ளார்.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri