ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 8 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல உலக நாடுகள் பல தடைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக 8 ஆவது நாளாக போரில் தாக்குப்பிடித்து வரும் உக்ரைன் இராணுவம், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேற்கு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை அதிகரித்துள்ளது. ரஷ்ய துருப்புகளை உக்ரைன் இராணுவம் வீழ்த்தி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு இழப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
இதன் காரணமாக வீரர்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என ரஷ்யா பல இழப்புகளை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் இதுவரையான எதிர்தாக்குதலில் 9 ஆயிரம் வீரர்களை வீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கிகள், 374 இராணுவ வாகனங்களை அழித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
ரஷ்ய பூனைகளுக்கு உக்ரைனில் தடை
ரஷ்ய இராணுவத்தின் இரகசிய திட்டத்தை முறியடித்த உக்ரைன்! அம்பலமாகும் உண்மைகள்
உக்ரைன் ரஷ்ய மோதல்! நுாற்றாண்டு காணாத அகதி நெருக்கடி - ஐ.நா எச்சரிக்கை