ரஷ்ய இராணுவத்தின் இரகசிய திட்டத்தை முறியடித்த உக்ரைன்! அம்பலமாகும் உண்மைகள்
உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்திய தடை குறித்து கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் விவரித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை மோசமடையப் போகிறது, உக்ரைன் நகரங்கள் மோசமான தாக்கங்களை சந்திக்கப் போகின்றன.
ரஷ்ய இராணுவம் சிறு சிறு குழுக்களாக உக்ரைன் நகரங்களுக்குள் ஊடுறுவும் சூழல் காணப்படுகிறது. உக்ரைனின் தொலைத்தொடர்பு வலையமைப்பை பயன்படுத்தி இதன்போது தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள்.
அதைக்கண்டறிந்த பின் உக்ரைன் அரசு ஒன்றை செய்தது, தங்களுடைய இந்த தொலைத்தொடர்பு வலையமைப்பு ஊடாக ரஷ்ய தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வருவதை அவர்கள் தடை செய்தார்கள் என சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
யுத்த களம் தொடர்பான தகவல்கள் மற்றும் அங்கு நிலவும் உண்மை நிலவரங்கள் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க நாமும் கையெழுத்திடுவோம் |