மகிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல்! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
கொழும்பு- கிருலப்பனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டின் மேல் இரண்டு முறை ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆளில்லா விமானங்கள் நேற்றையதினம்(27) ஆம் திகதி பிற்பகலில் பறக்கவிடப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல்
இது மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் என்றும், இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்டது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட்டதா என்பதில் கடுமையான சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி, தற்போது கொழும்பு கிருலப்பனையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam