லெபனான் ஜனாதிபதியுடன் ஐ.நா பொதுச் செயலாளர் சந்திப்பு: அமைதிக்கு அழைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று(13) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர், லெபனான் தற்போது சந்தித்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க
குறிப்பாக, பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் லெபனானின் இறையாண்மைக்கும் நிலைத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
லெபனான் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைக் களைவதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

லெபனானின் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் ஐ.நா அமைதிப்படை (UNIFIL) தொடர்ந்து பணியாற்றும் என்று குட்டேரஸ் உறுதி அளித்தார்.
மேலும், அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான சீர்திருத்தங்களை லெபனான் அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
லெபனானின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே இப்பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 5 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri