கிரிப்டோகரன்சி மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம்: மத்திய வங்கிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கையில் அந்நியச் செலாவணி சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி ஊடாக சட்டவிரோதமான முறையில் பணம் வெளிநாடுகளுக்குப் பரிமாறப்படுவது குறித்து கொழும்பு தலைமை நீதவான் அசாங்க போதகமகே கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல தனியார் வங்கி ஒன்றில் பொதுமக்களின் 290 மில்லியன் ரூபாய் பணம், 'பைனான்ஸ்' (Binance) கணக்குகள் மூலம் மோசடி செய்யப்பட்ட வழக்கு இன்று(13.2.2026)விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக 19 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மோசடிகள்
கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததைப் பலரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இது போன்ற நவீன தொழில்நுட்ப மோசடிகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து பதிவாகி வருவதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் இது போன்ற மோசடிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அநுரவின் ஆட்சியை வீழ்த்தவே முடியாது -எதிரணிகளின் சதித்திட்டம் வெறும் பகற்கனவு மட்டுமே! ஆதம்பாவா எம்.பி. முழக்கம்
நீதிமன்ற விசாரணை
இது வெறும் நீதிமன்ற விசாரணையுடன் மட்டும் நின்றுவிடாமல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய வங்கி முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

290 மில்லியன் ரூபாய் காணாமல் போன சம்பவம் சாதாரண திருட்டு அல்ல, இது ஒரு பாரதூரமான நிதி மோசடி எனத் தெரிவித்த நீதவான், இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை விரைவுபடுத்தி, மே 15-ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 6 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்