உக்ரைனில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஷ்யா
உக்ரைன் மீதான போர் நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தனது ராணுவ பலத்தைத் தக்கவைத்துக் கொள்ள ரஷ்யா பல்வேறு அதிரடி மற்றும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி. ரஷ்யா தனது ராணுவத்தில் சேரும் வெளிநாட்டினருக்கு 'விரைவான குடியுரிமை' வழங்குவதாக அறிவித்துள்ளது.
அத்துடன் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், அதிக சம்பளம் தரும் வேலை என்று கூறி ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வலுக்கட்டாயமாக ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைக்கப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
அதேநேரம் 2024 ஆம் ஆண்டில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போரிட வந்துள்ளனர்.
சிறைத் தண்டனை
மேலும் கடுமையான சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், ராணுவத்தில் சேர்ந்து போரிடச் சம்மதித்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரஷ்யாவில் நிரந்தரக் குடியுரிமை கோரும் வெளிநாட்டினர் கட்டாயம் ராணுவப் பணியாற்ற வேண்டும் என்ற புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய குடிமக்களை ராணுவத்தில் ஈர்க்க மிகப்பெரிய அளவில் பணம் வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் சில பகுதிகளில் ராணுவத்தில் சேரும் ஒருவருக்கு சுமார் 50,000 டொலர் வரை ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இது அந்தப் பிராந்தியத்தின் சராசரி ஆண்டு வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இது தவிர வரிக் குறைப்பு மற்றும் கடன் தள்ளுபடி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதேவேளை ரஷ்ய தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மொஸ்கோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், சுமார் 10 லட்சம் ரஷ்ய வீரர்கள் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் எனப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கணித்துள்ளது. இதில் 40 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் அடங்குவர்.
இத்தகைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையை ஏற்படுத்தி வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே வேளையில், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தங்கள் நாட்டு இளைஞர்களைப் போரிலிருந்து விடுவிக்க ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam