சொந்த நாட்டு மக்களே சுட்டுக் கொல்லப்படுகின்றனர்! ஜோ பைடன் கடும் கண்டனம்
மினியாபோலிஸ் நகரில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அமெரிக்கக் குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக மினியாபோலிஸில் நடந்து வரும் நிகழ்வுகள் அமெரிக்காவின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது.
கடுமையான கண்டனம்
தெருவில் தனது சொந்த நாட்டு மக்களே சுட்டுக் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தங்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பயன்படுத்துவதற்காகத் துன்புறுத்தப்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும், தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் மக்கள் போதுமான அளவு துயரங்களைச் சந்தித்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மினியாபோலிஸ் மக்களின் மன உறுதியைப் பாராட்டிய பைடன், "எந்தவொரு தனிநபரும், ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, அமெரிக்காவின் கொள்கைகளை அழித்துவிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அலெக்ஸ் ப்ரெட்டி மற்றும் ரெனி குட் ஆகியோரின் மரணம் குறித்து "முழுமையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான" விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தானும் தனது மனைவி ஜில் பைடனும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam