இந்தியாவில் நாமலின் பொதிகளை தூக்கிய செல்லும் சஜித் தரப்பு - தூக்கத்தை இழந்த எதிர்கட்சிதலைவர்
இந்திய குடியரசு தின நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஒடிசாவிற்கு நாமல் ராஜபக்ச சென்றிருந்தது பேசுபொருளாகியிருந்தது.
இந்தநிலையில் தற்போது நாமலின் பயணப் பொதியை தூக்கிச் சென்ற சஜித் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, நாமல் ராஜபக்சவின் பயணப் பொதியை இந்திய விமான நிலையத்தில் எடுத்து வரும் காட்சிகளை கொண்டு பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த்ராணி கிரியெல்லவும் நாமல் ராஜபக்சவின் தலைமையில் பங்கேற்றிருந்தார்.
இந்தியாவிலுள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்த நாமல் ராஜபக்ச சென்ற நிலையில் அவரை இலங்கையில் தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்று அவரது தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam