கிரீன்லாந்தில் வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள்! உலக வல்லரசுகளிடையே கடும் போட்டி
காலநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வரும் நிலையில், அங்கு மறைந்துள்ள இயற்கை வளங்கள் வெளிப்படுவதால் அதனை கைப்பற்ற உலக வல்லரசுகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கிரீன்லாந்து உலக சராசரியை விட இரு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது.
கிரீன்லாந்து அவசியம்
பனிப்பாறைகள் மறைவதால் அங்கு மறைந்திருக்கும் தங்கம், இரும்புத் தாது மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு அவசியமான அரிய மண் தனிமங்கள் பெருமளவில் வெளிப்பட்டு வருகின்றன.

அத்துடன், ஆசியா - ஐரோப்பா இடையிலான பயணத் தூரத்தைக் குறைக்கும் புதிய கடல் வழிப்பாதைகளும் உருவாகின்றன.
இந்தநிலையில், அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி கண்காணிப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருதுகிறார்.
ஆரம்பத்தில் இதனை வாங்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய அவர், தற்போது இராணுவ பலத்தை விடுத்து பேச்சுவார்த்தை மூலம் பாதுகாப்பு அணுகலைப் பெற முயல்கிறார்.
காலநிலை போர்
எவ்வாறாயினும், தனது 'துருவ பட்டுப்பாதை' திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மற்றும் சுரங்க முதலீடுகளைச் செய்ய அங்கு சீனா தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இருப்பினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் தமது இறையாண்மையை விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள் முழுமையாக உருகினால் கடல் மட்டம் 7.4 மீற்றர் வரை உயரக்கூடும், இது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தாக அமையும்.
இயற்கைப் பேரிடர் ஒருபுறம் அச்சுறுத்தினாலும், மறுபுறம் வளங்களுக்கான வேட்டை கிரீன்லாந்தை உலகின் முதல் 'காலநிலை போர்' முனையாக மாற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam