ரஷ்ய பூனைகளுக்கு உக்ரைனில் தடை
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 8 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பூனைகளுக்கு உக்ரைனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சர்வதேச பூனை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உக்ரைன் குடியரசு மீது ரஷ்ய கூட்டமைப்பு இராணுவம் படையெடுப்பு நடத்தி, தொடங்கியுள்ள போரால் அதிர்ச்சியடைந்தோம். இந்த போரால், ஒன்றுமறியாத பல மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இலட்சக்கணக்கான உக்ரைனியர்கள் வீடுகளை விட்டு தங்களை காத்துக்கொள்ள வேறு இடங்களுக்கு தப்பியோடியுள்ளனர். இந்த போரால் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் குழப்பங்களை நாம் அனைவரும் காண்கிறோம் என தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைகளை கண்டுகொண்டு பேசாமல் இருந்து விட முடியாது. அதனால், மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து, ரஷ்யாவில் உள்ள பூனை இனங்கள் எதனையும் இறக்குமதி செய்யவோ மற்றும் ரஷ்யாவுக்கு வெளியே எங்களது அமைப்பில் பதிவு செய்யவோ முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைன் ரஷ்ய மோதல்! நுாற்றாண்டு காணாத அகதி நெருக்கடி - ஐ.நா எச்சரிக்கை
ரஷ்ய இராணுவத்தின் இரகசிய திட்டத்தை முறியடித்த உக்ரைன்! அம்பலமாகும் உண்மைகள்
உக்ரைன் எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா! உச்சக்கட்ட பதற்றத்தில் போர்க் களமுனை