உக்ரைன் எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா! உச்சக்கட்ட பதற்றத்தில் போர்க் களமுனை
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்தியிலேயே தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில் ரஷ்யாவின் அடுத்த நகர்வு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி உக்ரைன் எல்லையில் அணு ஆயுதங்களை ரஷ்யா குவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலில் இன்று மீண்டும் இரு நாட்டு பிரதிநிதிகளும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளதாக பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை இரு நாட்டு பிரதிநிதிகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
குறித்த பேச்சுவார்த்தையானது பல மணி நேரம் நீடித்த போதும் எவ்வித தீர்வும் எட்டப்படாமல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையிலேயே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க நாமும் கையெழுத்திடுவோம் |
சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri