மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மும்பை அணியின் தலைவராக ரோஹித் சர்மா!
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு முன்னதாக, ரோஹித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை IPL செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதன் மூலம் IPL வரலாற்றில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்
கடந்த 2024ஆம் ஆண்டு IPL தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் மூலம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தலைமை மாற்றம் இடம்பெற்றுள்ளது.
தற்போது 39 வயதாகும் முன்னாள் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறாவது IPL கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்கும் இலக்குடன் மீண்டும் களமிறங்கவுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2020ஆம் ஆண்டு IPL கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri