இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா!

Sri Lanka China India
By T.thibaharan Nov 26, 2026 11:17 AM GMT
Report

கடந்த ஐந்து நூற்றாண்டுகள் இந்து சமுத்திரத்தை பற்றிப் பிடித்திருந்த வாஸ்கோடகாமா யுகத்தை இந்த நூற்றாண்டின் அரைவாசி பகுதிக்குள் சீனயுகம் விழுங்கிவிடும் அபாயம் தோன்றியிருக்கிறது. சீனயுகத்தின் பட்டுப்பாதையின் இருதயப் பகுதி இந்து சமுத்திரமாகும்.இப்பாதையில் கேந்திரப் புள்ளியாக இலங்கைதீவு அமைந்துள்ளது.

சீனயுகம் இலங்கைத்தீவில் மையம் கொண்டிருப்பதனால் ஈழத் தமிழினத்தினதும், இந்தியாவினதும் எதிர்காலம் சீன யுகத்தை எதிர்கொள்வதிலேயே தங்கி உள்ளது. இந்தியாவினுடைய புவிசார் அரசியல் என்பது இந்தியாவின் பாதுகாப்பு வலயமாகிய இந்துசமுத்திரத்தை பாதுகாப்பதுதான். அதனை இந்தியாவினால் உறுதிப்படுத்தப்படாது விட்டால் இந்தியாவுக்கு வாழ்வுமில்லை. வளமும் இல்லை.

இன்று சீனா வர்த்தகத்திற்கான சந்தை வெடிகுண்டு பெரு யுத்தம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. அந்த யுத்தம் என்பது பட்டுப்பாதை வாணிபம்தான். பட்டுப்பாதைக்கு இந்து சமுத்திரம் இன்றியமையாதது. அந்த இந்து சமுத்திரத்தை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தனது பெரும் முதலீடுகளை செய்திருக்கிறது.

இந்து சமுத்திர எல்லை

அந்த அடிப்படையில் தான் இலங்கைதீவில் அம்பாந்தோட்டை செயற்கை துறைமுகத்தையும்,கொமழும்பு போட்சிற்றி என்ற கடல் நகரத்தையும் உருவாக்கி இருக்கிறது. சுதந்திரத்துக்கு பின்னான இந்தியா தனது பாதுகாப்பு பற்றிய கொள்கையில் அது எப்போதும் வடக்கு, வட மேற்கு பகுதியின் எல்லைகளையே பெரிதும் கவனத்தில் கொண்டிருந்தது.

அது தனது 7526 மையில் நீளமான இந்து சமுத்திர எல்லை பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் செலுத்தவில்லை. இந்தப் பின்னணியில் இந்து சமுத்திரத்தினுள், இந்துசமுத்திரத்தைச் சார்ந்திராத அந்நிய நாடுகளின் படைப் பிரவேசம் இந்தப் பிராந்தியதின் அரசியல், சமூக, பொருளாதாரத்தை மாற்றியமைத்ததுவிட்ட அந்த வரலாற்றியல் விளைவுகள் பற்றியும் ஆழமாக நோக்குவது அவசியமானது.

உலகளாவிய வரலாற்றில் தரைசார் பேரரசுகளே தோற்றம் பெற்று தரைவழியாக அரசுகள் விஸ்தரிக்கப்பட்டன. அரசு என்ற நிறுவனம் தோன்றி 3500 ஆண்டு காலம் அதன் எல்லை தரை வழியாகவே விஸ்தரிக்கப்பட்டது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கிபி 10ம் நூற்றாண்டில் தமிழர்களால் இந்துமாகடலை கடந்து நாடுகளை உருவாக்கிய உலகின் முதலாவது கடலாதிக்கப் போரரசு சோழப் போரரசாகும்.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! | Indian Ocean Now In China S Hands

10ம் நூற்றாண்டிலிருந்து13ம் நூற்றாண்டு வரையான ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்து-பசுபிக் சமுத்திரப்பகுதிகளிலுள்ள வங்கக்கடலிலும்(தமிழன்கடல்), தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அராபியக் கடலிலும் சோழர்களின் கடற்படையும், சோழர்களின் வர்த்தக கம்பனிகளான ஐநூற்ரொருவர் கணம், நானாட்டார் கணம் போன்றவை ஏகசெல்வாக்குச் செலுத்தின. சோழர்கள் தான் முதன்முதலில் கடல்கடந்து படையெடுத்துச் சென்று தென்கிழக்காசியாவில் ஸ்ரீவிஜயா சாம்பிராஜ்சம் என்ற ஒருஅரசை ஸ்தாபித்தார்கள்.

கடல்கடந்து பேரரசுகளை உருவாக்கலாம் என்பதை உலகிற்கு முதலாவதாக செய்துகாட்டியவர்கள் சோழர்கள்தான். உலகின் முதலாவது கடற்படையும் சோழர்களதே. சோழர்களின் கடல்வீரர்களை சுமந்துகொண்டு தொடராக இந்தோ –பசுபிக் கடலில் உலவந்த கடற்கலங்களுக்கு நாவாய் என அன்று அழைத்தனர். இன்று ஆங்கிலத்தில் கடற்படைக்கு NAVY என்ற சொல் நாவாய் என்ற வேர்ச்செல்லில் இருந்தே தோன்றியது.

அதேபோல கடலிலே பயணம் செய்த வீரர்களின் பரம்பரையினர் மறவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அந்த மறவர் என்ற அடிச்சொல்லில் இருந்துதான் Marine என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. அதனை Marine forces(கடற்படையின் சிறப்பு படைப் பிரிவுகள்) மற்றும் Marine course (கடல்சார் நடவடிக்கைகளுக்கான பயிற்சி) என பொருள்பட ஆங்கிலத்தில் பிரயோகத்தில் உள்ளது.

தென்னிந்திய சோழப் பேரரசு இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்ததுக் கைக்கொண்ட கடல்சார் கொள்கையைத்தான் இன்று அமெரிக்கா "இந்தோ-பசுபிக் கோட்பாடு" அல்லது இந்தோ–பசிபிக் உத்தி (Indo-Pacific Strategy) என தமது நலன்சார்ந்து மீண்டும் புதுவடிவம் கொடுத்திருக்கிறார்கள். சோழருடைய கடல் ஆதிக்ககொள்கைதான் இன்றை நவீன இந்தியாவும் கை கொள்ள முனைகிறது.

இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு,மேற்குகடற்கரை முழுவதும் சோழப் பேரரசு காலகட்டத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டிலேயே அன்று இருந்தன. சோழருடைய கடல் ஆதிக்ககொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத்தீவின் தமிழர்பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியுகத்தில் இணைவது புரியும்.

சோழப் பேரரசின் வீழ்ச்சி

ஆகவே இந்து சமுத்திரத்தின் முதலாவது கடலாதிக்கம் என்பது தென்னிந்திய சோழப் பேரரசுதான். சோழ மன்னர்களின் கடற்கலங்களான நாவாய்களும் அதில் பயணம் செய்த மறவர் படைகளும் தான் முதலாவதாக இந்து சமுத்திரத்தை தமது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வந்தவர்களாவர். அவர்களுடைய காலத்தில் அராபிய, பாரசீகளுடைய வர்த்தகர்களும் படைகளும் இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியான அரபுக் கடலில் பயணம் செய்தார்.

ஆயினும் ஒட்டுமொத்தத்தில் கடல் ஆதிக்கம் சோழர்களின் கையில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் அரபிய கடலைத் தாண்டி வங்கக் கடலுக்குள் அரபியர்களோ, பாரசீர்களோ பிரவேசிக்க அவர்கள் அனுமதிக்கவேயில்லை. அன்று சோழர்கள் கடைப்பிடித்த அந்த கடற் கொள்கைதான் ஏறத்தாழ 400 ஆண்டுகள் தென்னிந்தியாவை கடல் வழியாக பாதுகாத்தது என்று சொல்ல வேண்டும்.

ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் அராபியர்கள் வங்கக்கடலில் நுழைந்து ஒரு நூற்றாண்டு செல்வாக்கு செலுத்தியதன் விளைவு இந்தோனேசியா, மலேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகள் தென்கிழக்காசியாவில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டன.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! | Indian Ocean Now In China S Hands

பெரும் இஸ்லாமிய நாடுகள் தோற்றுவதற்கான அடிப்படைக் காரணம் வங்கக்கடலில் இந்திய அரசர்கள் செல்வாக்கு இழந்தமைதான். அதாவது இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியலை கைநழுவவிட்டமையே. முதன் முறையாக இந்து சமுத்திரத்தினுள் நுழைந்த அந்நிய நாட்டுப்படை என்றால் அது சீனாவினதுதான்.

சீனாவின் மிங் வம்சத்து மூன்றாவது பேரரசன் யுங்லோவின் காலத்தில் சீனாவின் கடற்படை தளபதியான அட்மிரல் ஷென் -ஹி (Admiral Zheng- He) 1407 ஆம் ஆண்டு மலாக்கா தொடுகடலைக் கடந்து முதன் முதலில் இந்து சமுத்திரத்தில் பிரவேசித்தார். 62 கப்பல்களில் 37 ஆயிரம் படை வீரர்களுடன் தென்னிந்தியாவின் கள்ளிக்கோட்டைக்குச் சென்றார்.

அதன் பின் 1408 ஆம் ஆண்டு இலங்கையின் காலித் துறைமுகத்திற்கு வந்து திரும்பிச் சென்றார். நான்கு தடவைகள் 1407 தொடக்கம் 1419 வரையான காலப் பகுதியில் இந்து சமுத்திரத்தில் சீனக் கடல்படை வலம் வந்து தனது கடலாதிக்கத்தை நிலைநாட்டி சென்றது. 1409 இல் கொழும்பு கோட்டை ராஜ்யத்தை கைப்பற்றி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீன அரசின் கீழ் கோட்டை ராஜ்ஜியம் ஆளப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் 1498 இல் வாஸ்கோடகாமா ஆபிரிக்கக் கண்டத்தை சுற்றி இந்து சமுத்திரத்தில் நுழைந்த முதலாவது ஐரோப்பிய கடலோடியாகவும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளனாகவும் வரலாறு பதிவு செய்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த சமுத்திரம் ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகளின் மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாகவும் அந்நிய சக்திகளின் வேட்டைக் காடாகவும் மாறி கிடக்கிறது.

உலகளாவிய வர்த்தகத்துக்கு இந்து மாகடல் மிக அவசியமானது. அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் தொடுகடலாகவும், தாய்க்கடலாகவும் இந்து சமுத்திரம் அமைந்திருக்கிறது. இது 70.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சமுத்திரம். இந்தச் சமுத்திரத்தின் கரைகளில் 39 நாடுகள் உள்ளன.

வர்த்தக வளர்ச்சி

இந்து சமுத்திரக்கரைகளில் உள்ள துறைமுகங்களை அண்டிப் பிழைக்கும் நாடுகளாக 8 நாடுகள் உள்ளன. ஆகவே இந்த 47 நாடுகள் தவிர்ந்து இந்து சமுத்திரத்தில் ராணுவ தளத்தை கொண்டுள்ள நாடாக 2020 வரை அமெரிக்காவும் பிரித்தானியாவுமே இருந்து வந்தன. ஆனால் கொரோனாவுக்கு பின்னர் சீனா செங்கடலில் ஜிபிட்டியில் ஒரு ராணுவத் தளத்தை அமைத்துக் கொண்டு விட்டது.

அதே சமநேரத்தில் மியான்மாவில் கோர்க்கோ தீவு, இலங்கையில் அம்பாந்தோட்டை, பாகிஸ்தானில் குவாதார, கெனியாவில் லாமோ தீவு ஆகிய துறைமுகங்களை நீண்ட கால குத்தகைக்கு பெற்றுக் கொண்டு விட்டது. அந்த வகையில்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னான காலத்தில் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் பணிக்கர் , கிருஷ்ணமேனன் போன்றவர்களின் பார்வையில் இந்து சமுத்திர பாதுகாப்பை ""ஆசியவாத கொள்கை" என்ற அடிப்படையில் முன்னிறுத்தினர்.

இக்கொள்கை ""வாஸ்கோடகாமா யுக எதிர்ப்பு"" என்ற அடித்தளத்தில் இருந்து எழுந்ததாகும். இத்தகைய ஆசியவாத கொள்கையின் அடிப்படையில்தான் எப்போதும் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு வெளியுறவு கொள்கை கொண்டிருந்தது. இலங்கை ஆட்சியாளர்கள் 1971 இல் இந்தியாவை குளிர்விப்பதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்க ""இந்து சமுத்திரம் அமைதிப் பிராந்தியம்"" என்ற கொள்கையை முன் வைத்தார்.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! | Indian Ocean Now In China S Hands

எது எப்படி இருப்பினும் இந்தக் கொள்கை சரியானதுதான் ஆனால் அவர்களது நடைமுறை எதிர்வளமாகவே அமைந்தது. இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் பற்றி பணிக்கர் கூறுகையில் ""ஏனைய நாடுகளுக்கு இந்து சமுத்திரம் உலகில் உள்ள முக்கியத்துவமான சமுத்திரங்களில் ஒன்று மட்டுமே. ஆனால் இந்தியாவிற்கு இந்து சமுத்திரம்தான் அதன் உயிர்நாடி. இந்தியாவின் உயிர்வாழ்வும், சுதந்திரமும் இப்பிராந்திய நீர்ப்பரப்பின் சுதந்திரத்தில் தங்கி உள்ளது.

இப்பிராந்தியம் பாதுகாக்கப்படாவிட்டால் இந்தியாவிற்கு தொழில் அபிவிருத்தியும் இல்லை, வர்த்தக வளர்ச்சியும் இல்லை , ஒரு ஸ்திரமான அரசியல் அடித்தளமும் இல்லை"" என குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இத்தகைய உயர்ந்த சிந்தனை கொண்டிருந்த அவர்களால் இந்தியாவினது பாதுகாப்பிற்கான வியூகத்தை இந்து சமுத்திரத்தினது பாதுகாப்பு என்ற அடித்தளத்திலிருந்து கட்டமைப்புச் செய்ய முடியவில்லை என்பதுதான் இன்றைய இந்து சமுத்திர கொதிநிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இந்து சமுத்திரத்தை அமைதிப் பிராந்தியமாக பிரகடனப்படுத்தவும், மாற்றவும் இந்தியா தொடர்ந்து தவறிவிட்டது. அதன் விளைவுகளால் இன்று ஐரோப்பியரினதும், அமெரிக்கர்களினதும், சீனர்களினதும், உள்நுழைவும், இராணுவ பலப்பரீட்சையும் உருப்பெற்றுவிட்டது.

உலக ஒழுங்கு என்பது பொருள்சார் வர்த்தக ஒழுங்கு. வர்த்தகம் தமக்குச் சாதகமாக இல்லாவிட்டால் யுத்தம் தேவைப்படுகிறது. வர்த்தகம் பொருளை ஈட்டுவதற்கானது. ஆரம்ப காலங்களில் பொருளை ஈட்டுவது என்பது எதிர்த்தரப்பின் மீது யுத்தத்தை தொடுத்து கொள்ளையடிப்பது தான்.

சீனப்பெருஞ்சுவர்

அன்றைய பொருள் ஈட்டுவதற்கான வழி கொள்ளைதான். இன்று பொருளை ஈட்டுவதற்கான வழியாக வர்த்தகம் பரிணமித்திருக்கிறது. அன்று கொள்ளைக்கு யுத்தம் தேவைப்பட்டது. இன்று வர்த்தகத்துக்கு தடை ஏற்படுமிடத்து, தமக்கு சாதகமாக இல்லாவிடத்தில் பலம்மிக்க நாடுகள் யுத்தத்தில் குதிக்கின்றன.

வர்த்தகத்திற்கு படைளும், ஆயுதபலமும் தவிர்க்க முடியாதவை. ஆகவே உலகளாவிய செல்வங்களை ஈட்டும் வர்த்தகத்துக்கு கடலும், கப்பலும், படையும், தேவையாக உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையேல் வர்த்தகமும் செய்ய முடியாது. பொருளும் ஈட்டமுடியாது.

எனவே இன்றைய உலகில் கடலும், கப்பலும், படையும் அதன் விளைவான அதிகாரமும் பூமிப் பந்தின் செல்வங்களைக் கொள்ளை இடுவதற்கு தேவையாக உள்ளன. இதுவே இன்றைய இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள கொதிநிலைக்கு பிரதான காரணமாகும். உலகளாவிய வர்த்தகம் தங்கு தடையின்றி நிகழ்வதற்கு இந்து சமுத்திரம் இன்றியமையாதது.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! | Indian Ocean Now In China S Hands

அந்த வகையில் இந்து சமுத்திரத்தை ஒவ்வொரு பேரரசுகளும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முனைகின்றன. இந்த அதிகாரப் போட்டியின் விளைவுதான் மேற்குலகம், சீனா, இந்தியா ஆகிய மும்முனைப் போட்டி இந்து சமுத்திரத்தில் தோற்றம் பெற்றிருக்கிறது.

இந்த மும்முனைப் போட்டியில் இந்தியாவிற்கே இந்து சமுத்திரம் உரித்தானதும் முதன்மை பாத்திரம் வகிக்க வேண்டியதுமாகும். இன்னும் நூறு ஆண்டுகளின் பின் இந்த உலகத்தை சீனா ஆளும் என சீனாவின் தந்தை டாக்டர் சுன்யெட் சென் குறிப்பிட்டார்.அவருடைய வரிகளை தீர்க்கதரிசனமாக ஏற்று சீனா தொழிற்படுகிறது.சீனர்கள் எப்போதும் ஒரு நீண்டகால திட்டங்களுடனும், இலக்குகளுடனும் செயல்படுவர்.

அதற்கு உதாரணம் சீனப்பெருஞ்சுவர் கட்டப்படும் போது அது பல நூற்றாண்டுகள் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் வடக்கிலிருந்து வரும் படையெடுப்பை தடுப்பதற்கு அவர்கள் ஒரு நீண்ட நெடிய கட்டுமானத்தை தொடங்கினார்கள். கட்டியும் முடித்தார்கள். இது அவர்களுடைய பண்பாட்டியலில் வேரூன்றி கிடக்கிறது.

அந்த அடிப்படையில்தான், உலகத்தை ஆளும் நோக்கில்தான் அவர்கள் இந்து சமுத்திரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவதற்கு திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.

அந்தத் திட்டத்தின் அரைவழி பூர்த்திதான் சீனா மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் அதிகாரத்தை தாண்டி இந்துசமுத்திரத்தினுள் 503 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவே அதன் யுவான் வாங்-5 என்ற செயற்கைக்கோள் தொடர்புகளால் இலத்திரன்கள் கருவிகளின் ஊடான ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய உளவுக்கப்பலை 2023ஆகஸ்ட் 11 இலங்கை அம்பாந்தோட்ட சீனத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தியதன் மூலம் இந்துசமுத்திரத்தின் ஆதிக்க வலுச்சமநிலை கேள்விக்கு உள்ளாக்கியது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை

இந்துசமுத்திரம் இந்தியாவிற்கோ அல்லது மேற்குலகுக்கோ மட்டும் சொந்தமானது அல்ல தனக்கும் இந்து சமுத்திரத்தில் பங்கு உண்டு என்பதையும் சீனா வெளிப்படுத்தியுள்ளது. அதனை இந்தியா மிகத் தாமதமாகவே உணரத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இந்துசமுத்திரத்தை “லங்கா சமுத்திரம்“ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற சிங்கள தேசத்தின் விருப்பை வெளிப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட The Colombo Conversation 2026 நிகழ்ச்சியில் செவான் தேவாவரதன் டேனியல் ஆற்றிய உரையில் இலங்கைத் தீவை வெறும் சுற்றுலாத் தலமாகப் பார்க்கக்கூடாது.

இலங்கையின் மிகப்பெரிய அதன் புவியியல் இருப்பிடத்தை முன்னிறுத்தி இலங்கை உலகிற்கு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்லாமல், "Made in Sri Lanka” என்ற அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். இலங்கையின் விருப்புக்கள், கருத்தியல்கள், வாய்ப்பக்கள் மற்றும் பார்வைகளை பரந்த Lanka Ocean-Pacific பிராந்தியத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! | Indian Ocean Now In China S Hands

“லங்கா கடல்“ (Sea of Lanka) - இந்தச் சொல் நிச்சயமாக இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும். ஆனால் இலங்கையின் அரசியல் ராஜேந்திர வட்டாரத்துக்கும், புத்திஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனையில் ஊறிப்போன சிங்கள உயர் குலத்திற்கும், படைத்தரப்பினருக்கும் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், உட்வேகத்தையும் கொடுத்திருக்கும்.

உண்மையில் அவருடைய பேச்சு இலங்கை தீவின் மண்ணின் மைந்தர்கள் தாமே என்ற அடிப்படையில் அவர்களுக்கு பெருமித உணர்வை ஊட்டி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு இந்தியா தனது இந்துசமுத்திரத்தின் கேந்திரத் தன்மையும், இந்தியாவின் புவிசார் அரசியல் செல்வாக்கு இழந்தமையின் விளைவுதான் பாகிஸ்தானின் கூவாதர் துறைமுகமும், இலங்கையின் அம்பாந்தோட்டத் துறைமுகமும், மியார்மாவின் கோகோ தீவும், கெனியாவின் லாமோ துறைமுகமும் சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டு விட்டன.

இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் சீனா நுழைந்து நிற்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே இந்தியாவின் தென்கோடியில் சீனா இலங்கைதீவில் காலுான்யுள்ளமை இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் குவாதருக்கும், மியார்மாவின் கோகோ தீவுகளுக்கு சீனா தரைவழி ஊடாக தொடர்பை பேண முடியும்.ஆனால் அம்பாந்தோட்டைக்கு அவ்வாறு தொடர்பை பேனமுடியாது.

எனவேதான் சீனா தனது உளவுக் கப்பல்களை இந்தியாவை ஒட்டினாற்போல் இருக்கின்றதோடு அம்பாந்தோட்டையில் நிறுத்தி சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்னிந்தியா முழுவதையும் உளவு பார்க்கிறது. இந்தியாவின் கால் மாட்டில் இருக்கின்ற அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு எடுத்ததன் மூலம் மூன்று வழிகளாலும் இந்தியா முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

சீனாவின் யுத்தம்

பாக்குநீரிணை என்பது இந்தியாவையும், ஈழத்தமிழரையும் இணைக்கும் பாலமே தவிர பிரிக்கும் கடல் அல்ல. சீனாவின் நீண்ட காலத் திட்டம் இலங்கையில் காலுான்றி இந்தியாவை சுக்குநுாறாக உடைப்பது. அதிலும் குறிப்பாக இந்திய பாதுகாப்பு இருருதயப் பகுதியான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய பகுதிகளை உடைப்பதுதான்.

நான் இந்தியாவின் வடக்கில் பாடையை இறக்கினால் முப்பது நாட்களுக்குள் தென்முனையை அடைந்து இந்தியாவை முப்பது துண்டுகளாக உடைத்துவிடுவேன் என 1960 களின் ஆரம்பத்தில் மாவோ சொன்னர். இக்கூற்று மாவோவின் ””நீண்ட படை நடப்பு(The Long March) அனுபவத்திலிருந்தும், சீனப்பெருஞ்சுவர் மனப்பாங்கிலிருந்தும் வெளிப்பட்டது.

இப்போது சீனா இலங்கையில் காலுானியதன் மூலம் இந்தியாவின்பாதுகாப்பு இருதயத்திற்கு இடையிலான துார அளவை வெரும் 250 மைல்களாக குறைத்து நெருக்கமாக வந்து நிற்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! | Indian Ocean Now In China S Hands

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் யுத்தம் என்பது தென்னிந்திய பகுதிகளை குறி வைத்தே நிகழும். அது ஓரிரு ஆண்டுகளில் அல்ல அது சுமார் 50 ஆண்டு கால நீண்ட தூர திட்டமிடலுடனேயே சீனா மேற்கொள்ளும்.

கடலாதிக்க யுத்தத்தை சீனா தென்னிந்தியாவில் நடத்தினால் மேற்கொண்டால் தமிழகமும், ஈழத்தமிழர் தேசமும் அழியும். சென்னைக்கு மிக அருகில் ஆந்திரப் பிரதேசத்துக்குள் அமைந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் சென்னையை சுற்றியுள்ள கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), மெட்ராஸ் அணுமின் நிலையம், (MAPS), முன்மாதிரி வேக ஈனுலை (PFBR),காமினி ஆராய்ச்சி உலை. மற்றும் ஆவடி பாதுகாப்பு உற்பத்தி வளாகம் மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி ஆயுத உற்பத்தி மையம் உள்ளடக்கிய தமிழ்நாட்டின் அணுமையங்கள், பாதுகாப்புத் தொழில்துறை உள்ள ஐந்து முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், சேலம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளானால் 4கோடி தமிழர்கள் காணாமல்ப்போய்விடுவர்.

சீனா இலங்கையில் வலுப்பெற்றால், ஈழத்தமிழ்மண் இழக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் சீனயுகத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தென்னிந்திய பகுதிகளை உடைக்கின்ற நீண்டகாலத் திட்டத்தை சீனா நிறைவேற்றுமானால் வட இந்தியா என்றோ, அல்லது இந்தியா என்றோ ஒரு தேசம் இருக்க முடியாது.

அத்தகைய ஒரு தேசம் முதுகெலும்பு முறிக்கப்பட்ட சிங்கமாக பாகிஸ்தானிடமும், பங்களாதேசத்திடமும் அடிவேண்டிய நிலையிலேயே இருக்கும். 

அரசியலுக்கு வருவது தொடர்பில் மகிந்தவின் இளைய மகன் ரோஹித பகிரங்க அறிவிப்பு

அரசியலுக்கு வருவது தொடர்பில் மகிந்தவின் இளைய மகன் ரோஹித பகிரங்க அறிவிப்பு

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 26 November, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US