பொலிஸ் நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு
பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்குத் தடை விதித்து அரசாங்கம் எந்தவொரு சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசிகள் பயன்படுத்தலாம்..
பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் தவறானவை எனக் குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் வழமைபோன்று கையடக்கத் தொலைபேசிகளுடன் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், பொலிஸ் தடுப்புக் காவல் அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri