பிரான்ஸ் செய்தி நிறுவனம் மீது சைபர் தாக்குதல் : இணைத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்
பிரான்ஸைத் தளமாகக் கொண்ட சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, செய்தி மற்றும் உள்ளடக்கங்களை வாடிக்கையாளர்கள் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்யும் AFP Forum தளம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
செய்தி நிறுவனம் மீது சைபர் தாக்குதல்
பிரான்ஸ் நேரப்படி நேற்றுமுன்தினம்(26.11.2026) அதிகாலை 1.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தளம் முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு மாற்று சேவைகளை வழங்க AFP நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, பிரான்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அந்த நாட்டின் சைபர் பாதுகாப்புத் தலைவர் வின்சென்ட் ஸ்ட்ரூபெல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சைபர் தாக்குதல் சம்பவங்களின் சமீபத்திய நிகழ்வாக AFP மீதான தாக்குதல் அமைந்துள்ளது.