யாழ்ப்பாணம் - சாட்டியில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி
யாழ்ப்பாணம் - தீவகம், சாட்டியில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர் மூன்று மாவீரர்களின் தாய் இராசரத்தினம் புஸ்பராணியால் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
அஞ்சலி
சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணி தனியாருக்குச் சொந்தமானதாக இருந்த நிலையில், இவ்வருடம் காணி உரிமையாளரால் அனுமதி மறுக்கப்பட்டதால், துயிலுமில்லத்திற்கு முன்னால் உள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.





Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri