அநுரவுக்கு சவாலாக அமையும் நாமல்! அதிகாரத்தைப் பாதுகாக்க தீவிர நகர்வுகள்..
2029ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாமல் ராஜபக்ச கடும் சவாலாக இருப்பார் என்பதால், அவர் அநீதியின் கைதியாக்கப்பட்டுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்க மாதுகொட தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(26.11.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீதித்துறை அமைச்சுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கினாலும், நீதிபதிகளின் சம்பளத்தை அதிகரித்தாலும், அவர்களின் சேவைக் காலத்தை நீடித்தாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
அநீதியின் கைதியாக்கப்பட்ட நாமல்
நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அதற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் வீணாகிவிடும். தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக நீதித்துறையில் நேரடியாக தலையிடுகின்றது.
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கான ஓர் ஆயுதமாகவே அரசாங்கம் நீதித்துறையைப் பயன்படுத்துகின்றது. தங்களுக்கு அரசியல் ரீதியாகச் சவாலாக விளங்கும் தலைவர்களை எந்த அடிப்படையில் சிறையில் அடைத்து, பிணை வழங்காமல் வைத்திருக்கின்றீர்கள் என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

இன்று நாமல் ராஜபக்ச நீதியின் பெயரால் அநீதியின் கைதியாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக இருக்கின்றார். குறிப்பாக, 2029ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு அவர் அரசியல் ரீதியாகச் சவாலாக இருப்பார் என்பதாலேயே அவரை இவ்வாறு நடத்துகின்றனர்.
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் கிரிஷ் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றுடன் அவரைத் தொடர்புபடுத்தி, நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி, போலியான சாட்சியாளர்களை உருவாக்கி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, உண்மையான மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளரக்ளின் உதவியுடன் இன்று அவுஸ்திரேலியாவில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 20 மணி நேரம் முன்
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri