அரச ஊழியர்களின் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிபபு
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் 2027 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
நவம்பர் 25 ஆம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சில் ஆசிரியர் –அதிபர் தொழிற்சங்கக் கூட்டணியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
1. அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் மூன்றாம் கட்டம் 2027 ஜனவரியில் நடைமுறைப்படுத்தப்படும் .

2. ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3. கல்வி சேவையின் தொழில்முறைத் தரத்தை உயர்த்துவதற்காக கல்வி தொழில்சார் பேரவையை நிறுவுவதற்கான சட்டமூலம் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
4. அதில் முன்மொழியப்பட்ட சம்பளக் கட்டமைப்பு தொடர்பான ஐந்து நிபந்தனைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
5. அரச சேவையில் நிலவும் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களும் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
6. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
7. அதிபர்களுக்கு தொலைபேசிக் கொடுப்பனவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்