தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தாய் ஒருவரின் நெகிழ்ச்சிச் செயல்
வல்வெட்டித்துறையில் இன்று(26.11.2026) வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது.
இதேவேளை நிகழ்விடத்தில் வல்வெட்டித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது அனுமதியின்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம்பிடித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதுஇவ்வாறிருக்க அங்கிருந்த தாய் ஒருவரின் பேச்சு பலரையும் வியக்க வைத்ததாக கீழ்வரும் காணொளியில் கூறப்படுகிறது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....