வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பிறந்தநாள் நிகழ்வுகள்
இதன்போது இரண்டு கேக்குகள் வெட்டப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
அத்துடன் எள்ளுப்பாகு மற்றும் சொக்லேட்டுகளும் வழங்கப்பட்டன. மேலும், பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் இந்தப் பிறந்தநாள் நிகழ்வுகளை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தார்.
இதேவேளை, பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியின் மதிலில், "தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் வாழ்ந்த இல்லம்" என்ற வாசகம் அடங்கிய புதிய பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அங்கு பொருத்தப்பட்டிருந்த பதாகை கடந்த வாரம் இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய பதாகை பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள்! நீதிமன்றில் வெளியான தகவல்









