நடுக்கடலில் இயந்திர கோளாறினால் தவித்த கப்பல் - அவசர உதவி வழங்கி பாதுகாப்பாக மீட்ட இலங்கை
நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக செயலிழந்த 'எம்.வி. ஏ.ஏ.எல் ஜிப்ரால்டர்' (MV AAL Gibraltar) எனும் சரக்கு கப்பல் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த 159.99 மீற்றர் நீளமுடைய இக்கப்பல், சுமார் 23,000 டொன் சரக்குகளுடன் இயந்திர கோளாறில் கிக்கியுள்ளது.
பழுதுபார்ப்பு பணிகள்
இந்த கப்பல் இயங்க முடியாத கப்பலாக அறிவிக்கப்பட்டு, 'எஸ்.பி.எம் அர்ஜுன்' (SPM Arjun) எனும் மீட்பு இழுவைப்படகு மூலம் இலங்கை கடற்பரப்புக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

வணிகக் கப்பல் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகத்தின் இணக்கப்பாட்டுச் சான்றிதழ், துறைமுகப் பொறுப்பதிகாரி மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) பரிந்துரைகளைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கப்பலின் பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப சேவைகளையும் பிற வசதிகளையும் ஹம்பாந்தோட்டை சர்வதேசத் துறைமுகம் வழங்கியுள்ளதுடன், தற்போது பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், கப்பல் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.