நவம்பர் 27 நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! அநுரவை நெருக்கடிக்குள் சிக்க வைக்கும் ஆபத்தான நபர்கள்
கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளின்போது பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என கனடாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கத்திற்குத் தெரிந்திருக்கும் நிலையில், இவ்வாறான இடையூறுகளைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள் என்ற வகையில், அவர்கள் சட்டத்தை மீறிச் செயற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கீழ்மட்ட பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தை மீறிச் செயற்பட்டிருந்தால், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் உரிய முறையில் கையாளப்படாவிட்டால், நாட்டின் சட்டம் ஒழுங்கு கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை சுட்டிக்காட்டி உதய கம்மன்பில வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து
[
ட்ரம்பின் கடற்படை முற்றுகை... சீனாவில் இருந்து 1200 லொறிகளில் சரக்குகளை வரவழைத்த ஈரான் News Lankasri