சொகுசு வாகன வழக்கு - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு தீர்ப்பு அறிவிப்பு
சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து இன்று (25) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
குறித்த தீர்ப்பிற்கமைய, முதலாவது குற்றச்சாட்டிற்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 100,000 ரூபாய் அபராதமும் ஆறு மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதத்தைச் செலுத்த தவறின் மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தீவிர அரசியல் களத்திலிருந்து விலகும் ராஜபக்சர்களின் வாரிசுகள்! ஒன்பது பிரிவுகளாக பிரிந்துள்ள ராஜபக்ச குடும்பம்