போர்ட் சிட்டியில் பிரம்மாண்டமான காற்று மண்டபம்
கொழும்பு போர்ட் சிட்டியில் தெற்காசியாவின் முதலாவது Air Dome (காற்றழுத்தத்தில் தாங்கி நிற்கும் பிரம்மாண்ட மண்டபம்) அமைக்கப்பட்டுள்ளது.
இது போர்ட் சிட்டியின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த மண்டபம் ஒரே நேரத்தில் சுமார் 4,000 பேரை தங்க வைக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
400 முதல் 450 அறைகள்
எதிர்வரும் 2026 டிசம்பர் மாத இறுதிக்குள் இதனைச் செயற்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், சில கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடைய வேண்டியுள்ளது.
இந்த Air Dome சர்வதேச மாநாடுகள், வர்த்தகக் கண்காட்சிகள். கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள், ஊக்குவிப்புச் சுற்றுலா நிகழ்வுகள், பெரிய அளவிலான பொது மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் போன்ற பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இது துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களில் உள்ள நவீன நிகழ்வு மண்டபங்களை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பின்னர் போர்ட் சிட்டியில் இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
அந்த நிரந்தர மையத்தில் உள்விளையாட்டு / உள் நிகழ்வு அரங்கில் 4,000 பேர் அமரக்கூடிய வசதியும் வெளிப்புற நிகழ்வுகளில் 5,000 பேர் கலந்துகொள்ளக்கூடிய வசதியும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான நவீன வசதிகள் என்பன அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்த மாநாட்டு மையத்திற்கு அருகில் 400 முதல் 450 அறைகளைக் கொண்ட நட்சத்திரத் தரத்திலான வர்த்தக ஹோட்டல் ஒன்றையும் அமைப்பதற்குப் போர்ட் சிட்டி மாஸ்டர் பிளான் திட்டமிட்டுள்ளது.