இன்று இரவு வானில் அதிசயம்! இலங்கையை ஒளிரவைக்கப் போகும் முழுநிலவு
2026ஆம் ஆண்டின் 12ஆவது முழுநிலவு இன்று (நவம்பர் 24) இலங்கை நேரப்படி இரவு 8.24 மணியளவில் உச்ச நிலையை அடையவுள்ளது.
இதனால், இன்று மாலை இலங்கையின் கிழக்கு வானில் நிலவு தெளிவாகக் காணப்பட வாய்ப்புள்ளது.
சூரியன் மறையும் நேரத்தை அண்மித்துக் கிழக்கில் உதிக்கும் நிலவு, இரவு முழுவதும் வானில் பிரகாசிக்கும். திங்கட்கிழமை இரவு, செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை வரை நிலவு 98 சதவீதத்திற்கும் அதிகமாக ஒளிரும் நிலையில் காணப்படும்.
பீவர் முழுநிலவு'
எனினும், வடகிழக்கு பருவமழை காரணமாக நிலவும் மாறுபட்ட வானிலை மற்றும் மேகமூட்டம் நிலவைப் பார்ப்பதற்குத் தடையாக அமையலாம். எனவே, நிலவை அவதானிப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைக்கக்கூடும்.

வட அமெரிக்காவில் சுமார் ஒரு நூற்றாண்டாக விவசாயிகளுக்கான பஞ்சாங்கங்களில் ஒவ்வொரு ஆண்டும் தோன்றும் முழுநிலவுகளுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.
அவற்றில் சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டுப்புற மரபுகளிலிருந்தும், பெரும்பாலான பெயர்கள் வட அமெரிக்காவின் பழங்குடி மக்களின் சந்திர நாட்காட்டி மரபுகளிலிருந்தும் பெறப்பட்டுள்ளன.
கிழக்கு வானில் நிலவு
அந்த வகையில், நவம்பர் மாத முழுநிலவு 'பீவர் மூன்' (Beaver Moon) என அழைக்கப்படுகிறது.
வட அமெரிக்காவின் சில பகுதிகளில் வாழும் பீவர் (Beaver) எனப்படும் விலங்குகள் குளிர்காலத்திற்குத் தயாராகும் பருவத்துடன் இந்தப் பெயர் தொடர்புபட்டுள்ளது. இந்தப் பெயர்கள் முழுநிலவு தோன்றும் ஒரு நாளை மட்டும் குறிப்பதில்லை.

மாறாக, சுமார் 29 நாட்கள் கொண்ட முழுமையான சந்திர சுழற்சியைக் குறிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் இன்று (நவம்பர் 24) இல் பௌர்ணமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.