சுகயீன விடுப்பு போராட்டம்: அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு
எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுப்பு போராட்டத்தினை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆதரித்து சம்பள முரண்பாட்டினை தீர்க்க முன்வர வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று(24.11.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்திற்கான அழைப்பு
குறித்த தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இது அதிபர், ஆசிரியர்களின் முக்கியமான பிரச்சினைகளாக காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் கடந்த தேர்தல்களில் குறிப்பிட்டவாறு சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.