ஜெரோம் பெர்னாண்டோவுடன் தொடர்புடைய மதபோதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு! தீர்ப்பு இன்று..
ஸிம்பாப்வேயின் பிரபல மதபோதகரான யூபர்ட் ஏஞ்சல் (Uebert Angel), மோசமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று(24) செவ்வாய்க்கிழமை ஹராரே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அவர், கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஸிம்பாப்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்பு
40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஏஞ்சலுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பு சட்டத்தரணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் அல்லது சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஏஞ்சலின் சட்டத்தரணிகள் அவரது கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு புதன்கிழமை (25) வழங்கப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யூபர்ட் ஏஞ்சல், இலங்கை போதகரான ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்பதால் இலங்கையிலும் கவனம் பெற்றிருந்தார்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan