கொழும்பில் கோர விபத்தில் சிக்கிய யுவதிகள் - ஒருவர் பலி
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற மைதானத்திற்கு முன்பாக இடம்பெற்ற கோர விபத்தில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு யுவதி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிகள் கைது
நேற்று முன்தினம் (24) இருசக்கர வாகனத்தில் இரு யுவதிகளும் சென்ற நிலையில், பெலவத்தையிலிருந்து ராஜகிரியவை நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் 26 வயதான மெத்மி கவிந்தி வீரசிங்க என்ற யுவதி உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலங்கம திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனைக்காக உடலை IDH வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.