நடுநடுங்கும் கோட்டாபய ராஜபக்ச..! CIDயின் கைகளில் இறுதி முடிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட கோட்டாபய ராஜபக்ச, தற்போது சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாகக் கூறி, வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளார்.
கோட்டாபய மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்க வேண்டுமாயின், அவருக்கு எதிரான அடுத்த வழக்கில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் காரணங்கள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, இறுதிக்கட்டப் போரை நடத்தியது ராஜபக்சர்கள்தான் என்பது போன்ற கருத்துக்களை சரத் பொன்சேகா பல இடங்களில் தெரிவித்து வருகின்றார்.
ராஜபக்சர்கள் மீது சர்வதேச அழுத்தம் இருக்க வேண்டும் என்பதே சரத் பொன்சேகாவின் நோக்கமா என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், “இறுதிப் போர் காலப்பகுதியில் அதிகாரங்கள் என்னுடைய கைகளில் இல்லை” என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு விடயங்கள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகக் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பில் தெளிவான விளக்கத்தைத் தருகின்றது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி,
பால்கனியின் 60வது மாடியிலிருந்து விழுந்த பிரித்தானிய சிறுவன்: 2 வார கோமாவிற்கு பிறகு கண் விழிப்பு News Lankasri