உலகெங்கும் நாளை மாவீரர் நாள்! அனைத்து நிகழ்வுகளும் தமிழ்வின்னில் நேரலை
உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகின்றன.
அந்தவகையில், நாளை (27) மாவீரர் நாளை முன்னிட்டு இலங்கை, தமிழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நினைவேந்தல் நிகழ்வுகள்
குறிப்பாக, புலம்பெயர் தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் நாளை இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள், நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தமிழ்வின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.
அத்துடன், உலகெங்கும் இடம்பெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் நேரலைத் தகவல்களையும் தமிழ்வின் ஊடாகப் பார்வையிடலாம்.
உலகெங்கும் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான முழுமையான செய்திகளை நாளை முழுவதும் தமிழ்வின்னுடன் இணைந்திருந்து அறிந்துகொள்ளுங்கள்.