பசியின் காரணமாகவே மக்கள் சம்பள அதிகரிப்பு கோருகின்றனர் – நாமல்
மக்கள் பசியின் காரணமாகவே சம்பள அதிகரிப்பு கோருகின்றனர் என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் மற்றும் அரசாங்கத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் சம்பள அதிகரிப்பு கோருவது சுற்றுலா செல்வதற்கு அல்ல எனவும், இந்த விடயத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் அன்றாடம் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் சில புள்ளிவிவரத் தரவுகளைக் காண்பித்து மக்களை ஏமாற்றுவதற்கு முனைப்பு காட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் மீனவர்களையும் விவசாயிகளையும் பாதுகாக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்த அவர், "வரலாற்றில் முதல் தடவையாக விவசாய அமைச்சர் ஒருவர் நெற்செய்கையிலிருந்து விடுபடுமாறு விவசாயிகளிடம் கூறுகின்றார். இதன் பின்னணியில் வேறு ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பதனை நாம் அவதானிக்கின்றோம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதனை ஊக்குவிப்பதே இதன் உள்நோக்கமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாகவே, உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு இந்தியாவின் 'எல் நினோ' காலநிலை மாற்றமே காரணம் என நுகர்வோர் விவகார அமைச்சர் சுட்டிக்காட்டியதனை நினைவூட்ட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு நாட்டில் மழை பெய்யும் வரையோ அல்லது காலநிலை மாற்றம் ஏற்படும் வரையோ நாம் உணவு உண்பதற்குக் காத்திருக்க வேண்டிய ஒரு நிலைமையை அரசாங்கம் உருவாக்குகின்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், உள்நாட்டுக் கிராமியப் பொருளாதாரத்தை இந்த அரசாங்கம் சிதைத்து வருவதாகவும், நாட்டில் தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுவதாகவும், புதிய முதலீடுகள் செய்யப்படுவதில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri