தென் சீனப் பகுதிகளை தாக்கிய சூறாவளி: 9 பேர் உயிரிழப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் நௌல் சூறாவளிவால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்புகளை சீன தேசிய வானிலை மையம் வழங்கி வருவதுடன், இன்று(26.07.2026) அதிகாலை 3:50 மணியளவில் குவாங்டாங்- ஹுய்ஷோ பகுதியில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கரையைக் கடந்த மிக வலுவான சூறாவளி இது என்றும், அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றை வீசிய இந்தச் சூறாவளி, உள்நோக்கி நகர்ந்து படிப்படியாக வலிமை இழந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
9 பேர் உயிரிழப்பு
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 7,15,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு, ஹொங்கொங்கில் பலத்த காற்றினால் கட்டிடப் பலகைகள் சரிந்து விழுந்தன. இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக ஹொங்கொங் விமான நிலையத்தில் சுமார் 350 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
மேலும், ஹொங்கொங்கில் குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியின் தாக்கம் தாய்வானின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பலத்த மழையை பொழிந்துவிட்டுத் தற்போது தாய்வான் கடற்பகுதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri