வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே

Sri Lanka China World Economic Crisis
By T.thibaharan Sep 13, 2026 11:27 AM GMT
Report

21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சீனாவும் இலங்கைதீவும் நெருக்கமாக கைகொடுக்க தொடங்கிவிட்டன. இதற்கு பின்னே இந்துசமுத்திர கடலாதிக்கமே முதன்மை பெறுகிறது.

சீனா இந்துசமுத்திரத்தை கட்டுப்படுத்துவதே அதனுடைய புதிய பட்டுப்பாதை விஸ்தரிப்புக்கு அடித்தளமாக அமையும் என்பதனால் இலங்கையை மையப்படுத்தி பர்மாவின் கோகோ தீவு, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம், செங்கடயிலே ஜிபூட்டி, மற்றும் கெனியாவின் லாமோ தீவு என்பவற்றில் தனது நிலையான துறைமுகங்களை அமைத்துக் கொண்டு விட்டது.

இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவில் நிலை எடுப்பது இன்றைய புவிசார் அரசியலிலும், பூகோள அரசியலிலும் சீனாவின் கையை ஓங்க வைப்பதற்கான மூலோபாயமாகும்.

கடல்சார் தொழில் நடவடிக்கைகள்

இதன் அடிப்படையில் இலங்கைத்தீவை மையப்படுத்தி இந்துசமுத்திரத்தில் சீனா மேற்கொள்ளும் ஏகபோகத் தன்மை கொண்ட(Monopolistic) ஏகபோக(Monopoly) வர்த்தகக் கடல்வழி, மற்றும் கடல்சார் தொழில் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வது மிக அவசியமானது.

முதலில் ஏகபோக (Monopoly) என்பது ஒரு குறிப்பிட்ட சந்தை அல்லது சேவையில் ஒரே நிறுவனம் அல்லது நாடு ஆதிக்கம் செலுத்தி ஏனையவர்களின் போட்டியைக் கணிசமாகக் கட்டுப்படுத்தும் நிலைமை என்பதனையே குறித்து நிற்கிறது.

அதே நேரத்தில் ஏகபோக நடத்தை(Monopolistic behaviour) என்பது குறித்த நாடோ நிறுவனமோ முழுமையான ஏகபோகம் இல்லாவிட்டாலும், முதலீடு, உட்கட்டமைப்பு, துறைமுகக் கட்டுப்பாடு, விநியோகச் சங்கிலி, நிதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் போட்டியாளர்களைவிட மிகப்பெரிய ஆதிக்கத்தை உருவாக்கும் செயற்பாடாகும்.

வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே | Sinhalization Of The North East Sl

இந்த அடிப்படையில் பார்க்கும்போது, “சீனா இலங்கையில் முழுமையான கடல்வழி Monopoly ஒன்றை ஏற்கனவே உருவாக்கிவிட்டது”.

இலங்கை சார்ந்த முக்கியமான கடல்சார் உட்கட்டமைப்புகளில் சீனாவின் நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கு இன்று பெருமளவில் அளவில் அதிகரித்துள்ளது என்பதே உண்மையாகும்.

இலங்கைத் தீவின் தென் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். 2017 ஒப்பந்தத்தின் கீழ் China Merchants Port Holdings (CMPort) நிறுவனத்துடன் இலங்கை அரசு PPP முறையில் இணைந்தது. Hambantota International Port Group-இல் சீன நிறுவனத்திற்கு 85% பங்கும் Sri Lanka Ports Authority-க்கு 15% பங்கும் வழங்கப்பட்டது.

அதேவேளை, துறைமுக நிலத்தின் உரிமை சீனாவுக்கு விற்கப்படவில்லை 99 வருட குத்தகை அடிப்படையிலான இரண்டு முறை புதுப்பிக்கக்கூடிய சட்ட ஏற்பாடும் செய்யப்பட்டதாக இலங்கை அரசின் ஆவணங்கள் குறிப்பிடுவதில் இருந்து“இலங்கைத் துறைமுகத்தை சீனா முழுமையாக கைப்பற்றிவிட்டது” என்று கூறுவதில் தவறு ஏதுமில்லை.

இந்து மகா சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக இயக்கத்தில் சீன நிறுவனத்துக்கு நீண்டகாலப் பெரும்பங்கு கிடைத்திருப்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை வியூகத்துக்கு கிடைத்த வெற்றி என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

அதேபோல கொழும்பு துறைமுகத்திலும் சீனாவின் பங்குகள் மேலோங்கியே உள்ளது. அதே நேரத்தில் கொழும்பு துறைமுக நகரம்(Colombo Port City) மூலம் துறைமுகம், நிதி, வர்த்தகம், சேவைகள், முதலீடு மற்றும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Port City-யின் முதன்மை மேம்பாட்டாளராக(developer) China Harbour Engineering Company செயல்படுகிறது. இது China Communications Construction Companyன் துணை நிறுவனமாகும். இலங்கையில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இந்த சீன நிறுவனங்களுடன் தங்களுடைய உறவை புதுப்பித்து மேன்மேலும் பலப்படுத்துவதே வழக்கமானது.

இலங்கை–சீனா உறவு

அது ஜே .ஆர் ஜெயவர்த்தனா ஆரம்பித்து வைத்த புவிசார் அரசியலை(geopolitical) அரசியல் புவியியலால் அரசியற் புவியியல்(Political Geography). வெற்றி கொள்ளும் அரசியல் ராஜதந்திர வியூகமாகும். அந்த அடிப்படையிலேயே இன்றைய எம்.பி.பி அரசாங்கமும் இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பில் தொடர்ந்து முன்னெறியுள்ளன.

இலங்கை அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்துசமுத்துவத்தின் வலுச்சமநிலையை தன்பக்கம் திருப்புவதற்காக சீனா இந்துசமுத்திர துறைமுக நாடுகளை லாவமாக கையாள முனைகிறது.

இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது சீனாவின் அணுகுமுறையை வெறும் “துறைமுகம் கட்டுதல்” என்று பார்ப்பதைவிட, “துறைமுகம் → தளவாட மேலாண்மை(logistics) → தொழில் → வர்த்தகம் → நிதி → சேவை” என்ற ஒரு சங்கிலித் தொடராக முழுமையான இந்து சமுத்திர வர்த்தக கடல்சார் பொருளாதார வலையமைப்பை உருவாக்கும் முயற்சியாக அமைகிறது.

வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே | Sinhalization Of The North East Sl

சீனா இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் தனியாகக் கட்டுப்படுத்தாமல் இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களும் இலற்கைப் பொருளாதாரத்தில் செயற்படுகின்றன.

ஆனால் நாட்டின் நிறுவனங்கள் துறைமுகம் + தளவாட மேலாண்மை+ தொழில் + ஆற்றல் + நகர்ப்புற முதலீடு போன்ற பல அடுக்குகளில் தொடர்ந்து பெருமளவு பங்கெடுக்கும்போது, அது சீனாவின் ஏகோபோக ஆதிக்கத்தை(monopolistic influence) உருவாக்கும் சாத்தியத்தையே ஏற்படுத்தியள்ளது.

இதை சீனாவின் ஏகபோகத் திட்டம். இதனை மேற்குலகத்தையும் இந்தியாவையும் இந்து சமுத்திர வலுச்சம் நிலையில் பின்னோக்கித் தள்ளும் ஏகோபோக கேட்பாடு என்று கூறலாம்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை பயன்படுத்தி தனது “புதிய பட்டுப்பாதை“, "சந்தை குண்டு" கோட்பாட்டிற்கு இலங்கைதீவை ஒரு நெம்புகோளாக சீனா பயன்படுத்த முனைகிறது. இலங்கை இந்துசமுத்திரத்தின் முக்கிய சர்வதேச கடல்வழிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், அதன் துறைமுகங்களின் மூலோபாய முக்கியத்துவம் மிக அதிகம்.

அதே நேரத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு துறைமுகங்களும், நிலமும் இந்திய துணை கண்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற புவியியல் கேந்திரத் தன்னை கொண்டிருப்பதனால் தற்போது தெற்கில் தன்னை வலுப்படுத்திய பின்னர், இப்போது வடக்கு நோக்கி அது தனது கவனத்தை செலுத்த முனைகிறது.

இந்தியாவுக்கு இலங்கை முக்கியமான இந்திய-இலங்கை உடன்படிக்கையில் இந்தியாவின் எதிர் நாடுகளுக்கு இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனை உண்டு. ஆனால் வாணிபத்திற்காக என்றும், துறைமுக அபிவிருத்தி என்ற போர்வையிலும் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு சீனாவை அனுமதித்துவிட்டது.

இன்றைய வணிகத் துறைமுகங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் போர் சூழ்நிலைகளில் இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய திறனை உருவாக்கும் கட்டுமானப்பலம் சீனாவிடம் உண்டு. எனவே அம்பாந்தோட்டை சீனாவின் இராணுவத் தளமாக எந்த நேரமத்திலும் மாற்றி அமைக்கப்படலாம்.

2017 ஒப்பந்தத்தில் துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஏற்பாடுகளும், பாதுகாப்புப் பொறுப்பு இலங்கை அரசிடமே இருக்கிறது என பலரும் வாதிடலாம். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் மீறப்பட்டுத்தானே அம்மாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

துறைமுக வளர்ச்சி

சீனாவின் இலங்கை மீது அதீத ஈடுபாட்டை கொண்டு செயற்படுவது ஏதோ இலங்கைக்கு தானதர்மம் வழங்குவதற்காகவோ, அல்லது இலங்கை மக்களின் அவ்விருத்தியில் நன்மனம் கொண்டே அல்ல. அது தனது உலகம் தழுவிய அரசியல், பொருளியல் நலன்களை முழுமையாக அடைவதற்காக இலங்கையில் தனது சில்லறை பணத்தைக் கொட்டுவது அவசியமாகிறது.

இதனையே தமிழில் இறால் போட்டு சுறா பிடிப்பது" என்பர். சீனாவின் முதலீட்டினால் இலங்கைக்கு துறைமுக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தளவாட மேலாண்மை(logistics) மற்றும் சரக்கு மாற்று ஏற்றுமதி(transshipment) வாய்ப்புகள், தொழில்துறை மண்டல வளர்ச்சி, புதிய நிதி மற்றும் சேவைத் துறை, தொழில்நுட்பப் பரிமாற்றம், அன்னியச் செலவாணி வருமானம் போன்ற பல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே | Sinhalization Of The North East Sl

ஆயினும் இலங்கை தொடர்ந்து சீனாவின் கடன்கார நாடாகவே இருப்பதனையை சீனா விரும்பும். அதற்கேற்ற பொருளாதார வணிக செயற்பாடுகளையே சீனா இலங்கையில் ஊக்கிவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. சீனா இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைப் பேணுகிறது.

அதேநேரம், தற்போது வடக்கு–கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடம் அபிவிருத்தி, உதவி, மீன்பிடி, வீடமைப்பு, கல்வி போன்ற சமூக-பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நல்லெண்ணத்தை உருவாக்குவது அதன் இராஜதந்திர வியூகத்தின் புதிய பரிமாணத்தை காட்டுகிறது.

சீனாவின் அணுகுமுறையில் ஒரு முரண்பாடு இருப்பது போல தோன்றும் ஆனால் சீனாவைப் பொறுத்தளவில் அதற்கு பூனை கருப்பாக இருந்தால் என்ன? சிவப்பாக இருந்தால் என்ன? எலி பிடிப்பதே அதன் கண்ணு கருத்துமான இலக்காகும். சீனாவின் இலங்கை கடல்சார் முதலீடுகளை வட- கிழக்கிற்கு நகர்த்துவது “சீனாவின் ஆக்கிரமிப்பு”என்று வர்ணிப்பது அரசியல் ரீதியாக வலுவான வாதம்தான்.

சீனா வட- கிழக்கில் தமிழர்களுக்கு அபிவிருத்தி உதவி என்ற பெயரிலே மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் சிங்கள அவர்களை வடக்கு நோக்கி இழுத்து வடக்கை வடகிழக்கை சிங்கள மயமாக்களை இலகுபடுத்துவதோடு, தமிழர்களிக்கு அபிவிருத்தி உதவி் செய்வதன் மூலமாக சீனா தமிழர்களுடன் நெருக்கமான உறவை பேணுவதாக ஒரு போக்கை காட்டுவதனால் இந்தியா தமிழர்மீது அதிருப்தி கொள்ள வைப்பதான செயலாகவும் அமைகிறது.

இதன் மூலம் தமிழர்- இந்திய உறவை பிரித்து ஈழத் தமிழர்களை தனிமைப்படுத்தும் தொந்தரவு உத்தியாகவும் இது அமைகிறது. இத்தகைய வேலை திட்டத்தை சீனா எழுமாத்திரமாக செய்கின்ற ஒரு நாடு அல்ல. அது நீண்ட காலத் திட்டத்தோடும் பெரும் இலக்குகளோடும் வெற்றி என்ற நம்பிக்கையோடுமே அது ஆரம்பிக்கும்.

இவ்வாறுதான் இலங்கைத்தீவில் 2000 ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உச்ச நிலை அடைந்து ராணுவச் சமநிலை அடைந்தபோது சீனா தமிழக விடுதலைப் போராட்டத்திற்கு பின் கதவால் உதவுவதாக வாக்களித்தது.அபாரம் செயற்பட்டது.

அதே நேரத்தில் அது முன்தவால் இலங்கை அரசோடு இணைந்து இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது யுத்தத்தில் பெருமலான ஆயுத தளவாட பலங்களையும் அது செய்தது அதன் மூலம் மேற்குலக நாடுகளும் இந்தியாவும் சீனாவுடன் போட்டி போட்டு இலங்கைக்கு உதவ முன்வந்து தமது இருப்பை தக்க வைக்க அவர்களும் நுழைந்தனர்.

ஆனாலும் சீனாவுக்கே வெற்றிக்கனி கிடைத்தது. விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கான அனைத்து ராணுவ, புலனாய்வு, இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டான் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள்.

தமிழக விடுதலைப் புலிகள் வீழ்த்தியதன் சன்மானம்தான் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பதை தத்துவார்த்த ரீதியில் அறிவார்ந்து ஆராய்ந்தால் உண்மை புரியும். தற்போது சீனா வட- கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில சிங்கள மயமாக்களை இலகுபடுத்துகிறது.

தமிழர்களுடன் அபிவிருத்தி உதவி் மூலம் நெருக்கமான உறவை பேனுவதக காட்டுவதனால் இந்தியா தமிழர்மீது அதிருப்தி கொள்ளும். இது தமிழர்- இந்திய உறவை பதிப்பதாக அமையும். இது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. ஈழத் தமிழர்கள் அறிவார்ந்த சிந்திக்க தவறின் வல்லமை வாய்ந்த நாடுகளும், வர்த்தக ஏகோபோக உரிமையை இந்து சமுத்திரத்தில் நிலைநாட்ட முனையும் நாடுகளும் ஈழத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துவர்.

புவிசார் அரசியல்

தற்போது கொங்கொங்கில் உள்ள சீன பல்கலைக்கழகம் இலங்கை தீவுக்குள் ஒரு தமிழ் சுயாதீன தமிழரசை உருவாக்குவதற்கான சர்வதேச சட்ட தடைகளும் நடைமுறைகளும் பற்றி ஒரு ஆய்வு செய்வதாக பெரிதாக பேசப்படுகிறது. இது ஈழத் தமிழர்களுக்கு பெரு மகிழ்ச்சியை கொடுப்பதாக அமையலாம்.

ஈழத் தமிழர்களை தம்பக்கம் திருப்புவதற்கான உத்தியாகும் அமையலாம். ஆனால் இதன் முடிவு மேற்குலகமும், இந்தியாவும் ஈழத் தமிழர்களை ஒதுக்கி மேலும் நசுக்குவதற்கான தந்துரோபாயத்தை கொண்ட செயற்பாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனா வட-கிழக்கில் அபிவிருத்தி செய்கிறது என்றால் அந்த அபிவிருத்தி திட்டம் நோக்கி பெருமளவு சிங்களவர்கள் கவர்ந்திழுக்கப்படுவர்.

வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே | Sinhalization Of The North East Sl

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி எவ்வாறு சிங்களமயமாகிவிட்டது. அதேபோல வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற மணலாற்றுப் பகுதியும் சிங்களப்படுத்தப்பட்டு வடகிழக்கு மாகாணங்கள் இரண்டு துண்டாக நிலத் தொடர்பு பிரிக்கப்பட்டது. வடக்கில் ராணுவ அழுத்தம், அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான இளையவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

இதனால் அங்கு பெரும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கிவிட்டது. அதனை சிங்கள மக்களைக் கொண்டு நிரப்புவதன் மூலம் சிங்கள மக்களை நிரந்தர குடியிருப்பாளராக வடக்கிலே அமர்த்தி விட முடியும். அதன் மூலம் காலப்போக்கில் தமிழர்களை இனக்கலப்பு செய்து அழித்தொழிப்புச் செய்ய முடியும். தமிழர்களைச் சிங்கள மயப்படுத்துவது என்பது இலங்கைத் தீவை சீன மயப்படுத்தலாகவே அமையும்.

சீனா வட–கிழக்கில் தமிழர்களுடன் நேரடி உறவை உருவாக்குவது தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தவும் இனமயமாக்கல் செய்யவும் அதே நேரத்தில் இந்தியாவின் தமிழர் துருப்புச்சீட்டை(Tamil card) பலவீனப்படுத்தும் ஒரு திட்டமிட்ட அல்லது வேண்டுமென்றே உருவாக்கப்படும் உத்தி(deliberate strategy) என்பதை சீனா–இந்தியா–இலங்கை–தமிழர் என்ற நான்கு தரப்பினரின் புவிசார் அரசியல் உத்திகளையும் (geopolitical strategy) தனித்தனியாக ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும்.

இதன் மூலம் சீன“நாங்கள் இனப்பிரச்சினையில் ஒரு தரப்பை ஆதரிப்பவர்கள் அல்ல இலங்கையின் அனைத்து மக்களுடனும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்.” என்பதாக அமைவதனால் இது தமிழர்களிடையே சீனாவைப் பற்றிய ஆதரவு பார்வையை உருவாக்கக்கூடியது.

ஆனால் அதிகாரம் இல்லாத தமிழர்களுக்கான அபிவிருத்தி என்பது இறுதியில் சிங்களமயமாக்கல் என்பதாகவே முடியும். சிங்களமயமாக்கல் என்ற வாதம் எழுமாத்திரத்திலோ அல்லது ஆராயப்படாமலோ முன் வைக்கப்படவில்லை.

மாறாக வடகிழக்கு தமிழர்களின் நில அபகரிப்பு அல்லது நில உரிமை மாற்றம், புதிய குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல், அரச நிர்வாக எல்லைகளின் மாற்றம், பௌத்த மத நிறுவனங்களின் விரிவாக்கம், உள்ளூர் தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதத்தில் மாற்றம், மீன்பிடி வளங்களின் கட்டுப்பாடு போன்ற பல்துறை கட்டமைப்புகள் சார்ந்த தரவுகளை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படத்தியர் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையிலேயே சிங்களமயமாக்கல் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் வடக்கு–கிழக்கு தமிழர்களுக்கு வரலாற்று, அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்தியா இலங்கை மீதான மேலாண்மை செலுத்துவதற்கு தன்னை ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒரு முக்கிய பங்காளியாகக் கருதுகிறது.

இந்நிலையில் சீனாவின் வடக்கு நோக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகளும் தமிழ் மக்களுடனான நெருங்கிச் செல்லும் தமிழர்-இந்திய உறவு சிக்கலுக்கு உள்ளாக்குகின்ற அதேநேரம் அது ஒரு மறைமுகமான புவிசார் அரசியல் தாக்கத்தை(geopolitical effect) ஏற்படுத்துவதாக இருக்கிறது.

சீனாவின் நகர்வு

சீனா வடக்கு-கிழக்கு தமிழ்ச் சமூகத்துடன நேரடி சமூக-பொருளாதார தொடர்பையும் உருவாக்கினால், அது இந்தியாவின் பாரம்பரிய influence-க்கு போட்டியாக மாரும். சீனா திட்டமிட்ட ரீதியில் ஈழத் தமிழர் உடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதனால் இலங்கை அரசையும் தன்னுடைய இறுக்கமான பிடிக்குள் வைத்திருக்க முடியும்.

வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே | Sinhalization Of The North East Sl

அதன் மூலம் மேன்மேலும் இலங்கையிடமிருந்து வரக்கூடிய அனைத்தையும் பெறுவதற்கான வாய்ப்பையும் அது பெற்றுக் கொடுக்கும். ஆனால் மறுவலத்தில் தமிழர்கள் சீனாவுடன் அதிகமான பொருளாதார/அரசியல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், இந்தியா அதை தனது இராஜதந்திர, பாதுகாப்பு, மற்றும் பிராந்திய செல்வாக்கின் கோணத்தில் திறக்க விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே பார்க்கும்.

இதனால் தமிழர்களுக்கு ஒரு மூலோபாய இக்கட்டான நிலை (strategic dilemma) தோற்றுவிக்கும். அதாவது இது இந்தியாவின் பாரம்பரிய செல்வாக்குப் பரப்புக்குள் சீனாவின் இருப்பை அதிகரிக்கும் ஒரு இராஜதந்திர முயற்சியாக இருக்கிறது.

இது இந்தியா–தமிழர் உறவில் அவநம்பிக்கை உருவாகும் சூழலை ஏற்படுத்தக்கூடியது. ஈழத் தமிழர்கள் இந்தியா–சீனா போட்டியின் இடைநிலைக் களமாக மாற்றிவிடும் அபாயம் தற்போது சீனாவின் நகர்வால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு இரக்கமற்ற தண்டனை! பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு இரக்கமற்ற தண்டனை! பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர

எல் நினோ இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும்! வெளிவந்துள்ள புதிய அறிக்கை

எல் நினோ இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும்! வெளிவந்துள்ள புதிய அறிக்கை

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 13 September, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US