இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரைல் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் மூலம், இங்கிலாந்து வைற்வொஷ் முறையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று, இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி களமிற்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இதில் பெத்தும் நிஷ்ஷங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் சோனி பேகர், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அணி வெறும் 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டிப்பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில், இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், ஹரி புரூக் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் சார்பில் தரிந்து ரட்னாயக்க ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக சோனி பேகரும், தொடரின் ஆட்டநாயகனாக ஹரி புருக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.