இரு பெண்களை காரால் மோதி தப்பிச்சென்ற பொலிஸ் அதிகாரி கைது
இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்கள் மீது காரினை செலுத்தி விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மதுபோதை சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரை செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan