தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆம் நாள் அமர்வு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது நாள் அமர்வு இன்று(26.07.2026) ஒலுவில் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று(25.07.2026) ஒலுவிலில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது.
18ஆவது பொது பட்டமளிப்பு விழா
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பட்டமளிப்பு விழா நாளைய தினம்(27.07.2026) நிறைவடையவுள்ளது.
ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் மற்றும் வெளிவாரி மாணவர்கள் உட்பட மொத்தமாக 3,398 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 18ஆவது பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் நடைபெறுகின்றது.
விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, முதலாம் நாள் அமர்வில் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமர்வுகள் தொடர்பான விபரம்
இதன்படி,
1ஆம் அமர்வு: பொறியியல் பீடம் (2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டுகள்) மற்றும் தொழில்நுட்பப் பீடம்.
2ஆம், 3ஆம் அமர்வுகள்: இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.
4ஆம் அமர்வு: பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.

5ஆம், 6ஆம் அமர்வுகள்: கலை மற்றும் கலாசார பீட மாணவர்கள்.
இறுதி நாள்: 7ஆம், 8ஆம் அமர்வுகள்: முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பட்டதாரிகள்.
9ஆம் அமர்வு: கலை மற்றும் கலாசாரப் பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் ஆகியவற்றின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.








இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri